மதகுருமார்கள் கவன ஈர்ப்புப் போராட்டம்
தமிழினம் மீது சிங்களப் படைகள் புரியும் கொலை வெறியாட்டத்தை கண்டித்தும், தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவும் வேண்டி கிளிநொச்சியில் அனைத்து மதங்களின் குருமார்கள், ஐ.நா. பிரதிநிதிகள் செயலகம் முன்பாக கவன ஈர்ப்பு அமைதி இருப்புப் போராட்டம் நடத்தியுள்ளனர்.
கிளிநொச்சியில் உள்ள ஐ.நா வின் அகதிகளுக்கான உயர் ஆணைய செயலகம் முன்பாக இன்று புதன்கிழமை முற்பகல் 8.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கவன ஈர்ப்பு அமைதி இருப்புப் போராட்டத்தை அவர்கள் நடத்தினர்.
இந்து-கிறிஸ்தவ-இஸ்லாமிய மதகுருமார்கள் கலந்து கொண்டனர். அனைவரும் கறுப்புப்பட்டி அணிந்து இந்த கவன ஈர்ப்புப் போராட்டத்தை நடத்தினர்.
கத்தோலிக்க திருச்சபையின் நீதிக்கும் சமத்துவத்துக்குமான அமைப்பின் தலைவர் அருட்திரு ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளார் தலைமையில் அமைதி இருப்பு கவன ஈர்ப்புப் போராட்டம் நடந்தது.
அமைதி இருப்புப் போராட்டத்தின் இறுதியில் ஐ.நா. செயலர் கொபி அனானுக்கான மனு ஒன்று ஐ.நாவின் அகதிகளுக்கான உயர் ஆணையப் பிரதிநிதியிடம் கையளிக்கப்பட்டது.





செய்தி, படங்கள்: புதினம்.

0 Comments:
Post a Comment
<< Home