மன்னாரில் சிங்களப்படை கொடூரம்
மன்னார்-வங்காலையில் நேற்றிரவு தமிழ்க்குடும்பமொன்று கொடூரமான முறையிற் சிங்களப்படையாற் படுகொலை செய்யப்பட்டுள்ளது. சின்னப்பிள்ளைகளைக்கூட கழுத்திற் சுருக்கிட்டுப் படுகொலை செய்துள்ளது இராணுவம்.
வங்காலைக்கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி மார்டீன்(35), அவரது மனைவி மேரி மதலேன் (27), மற்றும் அவர்களின் பிள்ளைகளான லக்சிகா(9), நிக்சன(7) ஆகியோரே இவ்வாறு கோரமாகப் படுகொலை செய்யப்பட்டனர்.
குடும்பத்தலைவர் மூர்த்தி தச்சுத்தொழிலாளி. அவரின் தச்சுத் தொழிலுக்கான உபகரணங்களும் கொலையாளிகளாற் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நீண்டசித்திரவதைக்குப்பின்பே இவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதியிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
படுகொலை செய்ப்பட்டவர்களின் படங்கள் கோரமானவை. விரும்பாதவர்கள் பார்க்கவேண்டாம்.
செய்திகளும் படங்களும்.
சங்கதி
தமிழ்நெட்

1 Comments:
ரத்தம் கொதிக்கிறது. ஐயோ கடவுளே. இதற்கு ஒரு முடிவே கிடையாதா?
மிருகங்களின் சண்டையில் மாட்டிக்கொண்டு உயிர்விடும் மனிதர்கள்!
அந்தப் பிஞ்சுக் குழந்தைகள் என்ன பாவம் செய்தன!
இந்தக் கொடூரர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும்.
Post a Comment
<< Home