இந்திய இராணுவ வெறியர்கள் தேடிய பரிகாரம்
எல்லாம் முடிந்துவிட்டது. 'இந்திய இராணுவ வெறியர்கள்' தாம் ஈழத்தில் செய்த எல்லாவற்றுக்கும் பரிகாரம தேடிக்கொண்டுவிட்டார்கள். இனிமேல் யாரும் அந்தப் பழைய நிகழ்வைப் பற்றிக் கதைக்கவேண்டாம்.
இந்திய வெறியர்கள் மட்டுமன்றி சிங்களக் காடையரும் பரிகாரம் தேடிக்கொண்டனர். ஆக இனி சிங்களவன் செய்த கொடுமைகளையும் மறந்துவிடவேண்டும்.
சரி எப்படிப் பரிகாரம் தேடியுள்ளார்கள் தெரியுமா? விடுதலைப்புலிகளின் ஊடக ஒருங்கிணைப்பாளர் எனச் சொல்லப்படும் தயாவுக்கு கொழும்பில் இயங்கும் 'அப்பலோ' மருத்துவமனையில் சிகிச்சையளித்ததன் மூலம் இந்திய வெறியர்களும் சிங்களக் காடையரும் தங்கள் பாவங்களைக் கழுவிக்கொண்டார்கள்.
மேற்படிச் செய்தியையும் பரிகாரக் கண்டுபிடிப்பையும் வெளியிட்ட நண்பர் வீரமணிக்கு நன்றி.
ஆனால் இந்தியா ஏற்கனவே பரிகாரம் தேடிக்கொண்டுவிட்டது பலவழிகளில். இந்திய சோப்பு, சீப்பு, கண்ணாடி முதற்கொண்டு, உடுபுடைவைகள், அலுமினியப் பாத்திரங்கள் வரை தட்டு முட்டுச் சாமானுகள் வரை இலங்கையில் விற்றபோதே பரிகாரம் தேடிக்கொண்டார்கள். அதைவிட ரஜனி, விஜய், அஜித், கமல், சிம்ரன், ஜோதிகா என்று எண்ணற்ற நட்சத்திரங்களின் படங்களைத் தயாரித்து வழங்கி ஈழத்தவரைச் சந்தோசப்படுத்தியபோதே இந்தியா பரிகாரம் தேடிக்கொண்டுவிட்டது. இலங்கையின் ஒட்டுமொத்த எண்ணெய் வழங்கற் கட்டுப்பாட்டைத் தன்கையிற்கொண்டு மக்களுக்குச் சேவை வழங்கியபோதே பரிகாரம் தேடிக்கொண்டது.
அப்பலோவில் சிகிச்சையளித்துத் தான் பரிகாரம் தேடிக்கொள்ள வேண்டுமென்பதில்லை.
சிங்களவர்களை எடுத்தால் அதைவிட நிறையச் சொல்லக் கிடக்கு.

6 Comments:
ஒரு மனிதனின் மனிதாபிமான மருத்துவத் தேவைகளைக் கூட, அரசியலாக நினைக்கும் இவர்களை என்னவென்று சொல்வது! பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட்டை மத்திய அரசு ஆயுதமாக எடுத்தது முதல் பல விடயங்களில் அந்த உண்மையைக் காணமுடியும்.
ராஜீவ் காந்தியின் விடயத்தை வைத்துக் கொண்டு, இத்தனை மக்கள் அழியும்போது வேடிக்கை பார்ப்பதும் அதனால் தான்!
அரசியலின் கோரத்தை ஜனநாயக அரசு, காந்தியம் என்ற கோர முகமூடிக்குள் போட்டுக் கொண்டாலும், பல தடவை அவை கிழிந்து போகின்றன!
This comment has been removed by a blog administrator.
This comment has been removed by a blog administrator.
This comment has been removed by a blog administrator.
இங்கே தமிழன் என்ற பெயரில் வந்தவரின் பின்னூட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
நான் சோப்பு, சீப்பு விற்பனை பற்றிச் சொல்லியது வேறு அர்த்தத்தில். அதாவது இந்தியப் பொருட்கள் எது விற்கப்பட்டாலும் யார் மூலம் விற்கப்பட்டாலும் அது இந்தியப்படை செய்யும் பரிகாரமாகவே பார்க்கப்பட வேண்டுமென்பதே. அப்பலோவில் வழங்கப்படும் சிகிச்சை மூலம் பரிகாரம் கிடைத்தால் சோப்பு சீப்பு விற்பதாலும் கிடைக்கும் என்பதுதான் நான் சொல்ல வந்தது.
தமிழனின் பின்னூட்டத்தைத் தொடர்ந்து வந்த செந்தழல் ரவியினதும் இன்னொரு பெயரில்லாதவரினதும் பின்னூட்டங்களும் நிறுத்தப்படுகின்றன.
தமிழன் றோ என்று சொன்னது RAW ஐத்தான்.
Post a Comment
<< Home