Wednesday, July 26, 2006

திருகோணமலையில் விமானங்கள் குண்டுவீச்சு

இன்று (26.06.06) புதன்கிழமை மாலை 4 மணியளவில் திருகோணமலையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மீது சிறிலங்கா வான்படை விமானங்கள் குண்டுவீசியுள்ளன.
நான்கு தடவைகள் இவ்விமானங்கள் தாக்குதல் நடத்தியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

திருகோணமலையில் பாதிக்கப்பட்ட தரப்புச் செய்தியின்படி சொத்துக்களே அழிக்கப்பட்டதாகவும் மக்களுக்கோ புலிகளுக்கோ சேதங்களில்லையென்றும் தெரியவருகிறது. இரு பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

பரமி குலதுங்க மீதான தற்கொலைத் தாக்குதலுக்கு எந்த எதிர்த்தாக்குதலும் செய்யாதிருந்த அரசபடை ஆச்சரியப்படும் விதத்தில் பெரிதாக எதுவும் தாக்குதல் நடைபெறாமலேயே இன்று வான்தாக்குதல் நடத்தியுள்ளது.
புலிகள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் நீரை வழிமறித்ததால் தாக்குதல் நடத்தப்பட்டதாக அரசதரப்பு கூறுகிறது. புலிகள் தரப்பிலிருந்து இதுதொடர்பில் எக்கருத்தும் இதுவரை வரவில்லை.
(இஞ்சையும் தண்ணிவிடாத பிரச்சினை வந்திட்டுதோ?)

இன்னும் வாகனேரிச் சம்பவத்துக்கே சத்தம் காட்டாமல் இருக்கும் கண்காணிப்புக்குழு இதற்கு எதுவுமே செய்யப்போவதில்லை. (வாய்திறந்து ஏதும் சொல்லப்போவது கூட இல்லை) அவர்கள் வெளியேற வேண்டிய காலமும் நெருங்கிவருகிறது.

மட்டுப்படுத்தப்பட்ட பதிலடித்தாக்குதல் இருக்குமோ?
அல்லது நோர்வேச் சிறப்புத் தூதுவரின் வருகை அதை ஒத்திப் போடுமோ?

0 Comments:

Post a Comment

<< Home