இரண்டாம் நாளாக வான்படை குண்டுவீச்சு.
விடுதலைப்புலிகளி்ன் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது இரண்டாம் நாளாகவும் சிறிலங்கா வான்படை குண்டுகளை வீசியது.
நேற்று திருகோணமலையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது வான்தாக்குத்லை நடத்தியிருந்தது அரசபடை. ஆறொன்றின் அணைப்பகுதியைத் திருத்துவதற்காக பொறியாளரை அனுப்பவே இத்தாக்குதல் என ஒரு காரணம் சொல்லப்பட்டது.
இன்று காலை வன்னியில் முல்லைத்தீவு நகரம் மீதும் அதையண்டிய கேப்பாப்புலவு மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இரண்டாம் நாளாகத் தொடர்ந்து வான்தாக்குதலை நடத்திவருகிறது அரசு. இதற்குரிய காரணமாக எதைச் சொல்லப்போகிறதென்று தெரியவில்லை.
முல்லைத்தீவை அண்டி புலிகள் புதிய விமானத்தளத்தை அமைக்கிறார்கள் என்று சொல்வார்களோ?

0 Comments:
Post a Comment
<< Home