சம்பூர் படையினராற் கைப்பற்றப்பட்டது?
திருமலையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பூர்ப் பகுதியைத் தாம் கைப்பற்றியுள்ளதாகச் சிங்களத் தரப்புக் கூறியுள்ளது.
நடைமுறையைப் பார்க்கும்போது உண்மையாயிருக்கலாமென்று தோன்றுகிறது. அப்பகுதியைக் கைவிடுவதென்று புலிகள் தீர்மானித்துவிட்டனரா? அல்லது உண்மையில் தாக்குதலை எதிர்கொள்ள முடியவில்லையா?
தாம் தொடரப்போகும் பாரிய தாக்குதலுக்கு ஓர் அங்கீகாரத்தைப் பெற இப்பின்னடைவா?
ஆனால் ஒன்று. தற்சமயம் சிங்களப்படையின் உளவுரண் நன்கு உயர்ந்துள்ளதென்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்.
சம்பூரைக் கைப்பற்றியிருந்தால் திருகோணமலைத் துறைமுகத்துக்கான நிரந்தர ஆபத்தைத் தற்காலிகமாகத் தள்ளிப்போட்டுள்ளது சிறிலங்காப் படை.
அதுசரி, இப்போது புலிகள் நிலமீட்பை நடத்தினாலும் புலிகளை பின்வாங்கச் சொல்லி சர்வதேசம் சொல்லுமா? (முன்பு மூதூரைக் கைப்பற்றியபோது சொன்னமாதிரி)
புலிகள்தான் ஒப்பந்தத்தை முறித்தார்கள் என்று பன்னாட்டுச் சமூகம் சொல்லுமா?
போகிற போக்கைப்பார்த்தால் இனியொரு சமாதானப் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லைப்போலுள்ளது.
சம்பூரைக் கைப்பற்றிவிட்டுத்தான் இனி புலிகளுடன் பேச்சுவார்த்தை என்று சிங்களத்தரப்பு சொல்லியிருந்தது. இப்போது கைப்பற்றியபின் புலிகளைப் பேச்சுக்கு அழைப்பார்களா?
ஆனால் புலியின் பதில் அனைவருக்கும் தெளிவானதே.
யாழ்ப்பாணத்தை இழந்தபோதே புலி எதிர்நிலை எடுத்தது.
ஈழப்போராட்டத்தில் சம்பூர் இதுவரை இருந்ததைவிட அதிமுக்கியமான ஓரிடமாக வரலாற்றில் இடம்பெறப்போவது உறுதியாகிவிட்டது.

0 Comments:
Post a Comment
<< Home